சென்னை: குரூப் 2 தேர்வுக்கு பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்களில், ஏற்கப்பட்ட விண்ணப்பங்களின் விவரங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெ.ஷோபனா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஜூலை 6-ல் குரூப் 2 தேர்வு நடைபெறவுள்ளது. குரூப்-2 பிரிவில் காலியாகவுள்ள 1,241 பணியிடங்களுக்கு முதல் நிலத் தேர்வு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வில் பங்கேற்க 6.2 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.
சரியான முறையில் விவரங்களைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பக் கட்டணம், தேர்வுக் கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்களின் விவரங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயத்தின் இணைய தளமான www.tnpsc.gov.in-இல் வெளியிடப்பட்டுள்ளது.
குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண்ணை பதிந்து தங்களது விண்ணப்பம் தேர்வாணையத்தின் இணைய தளத்தில் பெறப்பட்டதற்கான விவரத்தினை சரிபார்த்துக் கொள்ளலாம்.
சரியான முறையில் விண்ணப்பங்களைப் பதிவு செய்து உரிய விண்ணப்பக் கட்டணம் செலுத்தி, அதன் விவரம் இணையதளத்தில் இல்லாவிடில், அந்த விண்ணப்பதாரர்கள் பணம் செலுத்தியதற்கான ரசீதை (Challan) நகலுடன் தேர்வாணையத்தின் மின்னஞ்சல் முகவரியில் (contacttnpsc@gmail.com) விவரங்களை அனுப்பலாம்.
விண்ணப்பதாரரின் பெயர், குரூப் 2-க்கான விண்ணப்பப் பதிவு எண்,
விண்ணப்ப தேர்வுக் கட்டணம் (ரூபாய்), கட்டணம் செலுத்திய இடம் (அஞ்சலகம் அல்லது இந்தியன் வங்கி) ஆகிய விவரங்களைத் தெரிவிக்கலாம் என்று தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications












