மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஆயில் இந்திய என்னும் எண்ணெய் நிறுவனத்தில் (Oil India Limited) காலியாக உள்ள Consultant பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கு ரூ.40 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய எண்ணெய் நிறுவனம் (Oil India Limited)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Consultant
மொத்த காலிப் பணியிடங்கள் : பல்வேறு பிரிவுகளின் கீழ் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
வயது வரம்பு : மேற்கண்ட பணியிடங்களுக்கு 24.10.2021 தேதியின்படி 67 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி :
Oil Sector PSU துறை சார்ந்த பணிகளில் Executive Grade நிலைகளில் பணியாற்றி இருக்க வேண்டும்.
அல்லது அரசு நிறுவனங்களில் குறைந்தபட்சம் Tahsildar பதவி வகித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : ரூ.40,000 மாதம்
மேலும், ஊதியத்துடன் Mobile மற்றும் Landline Telephone கட்டணங்கள் உள்ளிட்டவற்றிற்கு என ரூ.7,750 வழங்கப்படும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து con_app@oilindia.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 24.10.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர் Personal Interaction மூலம் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.oil-india.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு அறிவிப்பு லிங்க்கை காணவும்.


Click it and Unblock the Notifications












