இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் என்று அழைக்கப்படும் இஸ்ரோ (ISRO) நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய விண்வெளித் தொழில்நுட்ப கல்லூரியில் (IIST) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்த இயக்குநர் (Director) பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம். விளம்பரம் தொடர்பான அறிவிப்பைக் காண https://www.isro.gov.in/media_isro/pdf/recruitmentNotice/2023_December/AdvertisementforpostofDirectorIIST_dated23Dec2023.pdf என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்யலாம்.
இஸ்ரோ என்று அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (Indian Space Research Organization, ISRO) இந்திய அரசின் முதன்மையான தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் ஆகும். பெங்களூருவில் தலைமைப் பணியகம் கொண்ட இஸ்ரோ 1969 ல் உருவாக்கப்பட்டது. தற்போது 16,000 ஊழியர்கள் இஸ்ரோவில் பணியாற்றுகின்றனர்.
ஏறத்தாழ 41 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் செயலாற்றப்படுகிறது இந்த இஸ்ரோ நிறுவனம். இந்திய அரசின் விண்வெளித்துறையின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் இஸ்ரோவுக்கு சோம்நாத் தலைவராக உள்ளார்.

இஸ்ரோ உலகின் மிகப்பெரும் விண்வெளி ஆய்வு நிறுவனங்களில் ஆறாவதாக உள்ளது. இதன் முதன்மை நோக்கமாக விண்வெளித் தொழில்நுட்பத்தில் மேம்பாடுகளை ஆராய்வதும் அவற்றை நாட்டு நலனுக்காகப் பயன்படுத்துவதும் ஆகும்.இஸ்ரோ தனது நிறுவனக் காலத்திலிருந்து தொடர்ந்து பல சாதனைகளைக் கண்டு வந்துள்ளது.
1975 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் செயற்கைக்கோள், ஆரியபட்டா இஸ்ரோவால் அமைக்கப்பட்டு சோவியத் ஒன்றியத்தால் விண்ணில் செலுத்தப்பட்டது.1980-ல் இந்தியாவில் கட்டமைக்கப்பட்ட ஏவுகலம் (எஸ். எல். வி-3) மூலமாக முதல் செயற்கைக் கோள், ரோகிணியை விண்ணில்
லுத்தியது.உச்சக்கட்டமாக 2008ஆம் ஆண்டில் நிலவை நோக்கிய இந்தியாவின் முதல் பயணமாக சந்திரயான்-1 ஏவப்பட்டது. கடந்த ஆண்டுகளில் இஸ்ரோ இந்திய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமன்றி பிறநாட்டு வாடிக்கையாளர்களுக்கும் விண்வெளி/ செயற்கைக் கோள் தொடர்புடைய செயல்பாடுகளை ஆற்றி வருகிறது.
விண்வெளி ஆராய்ச்சியில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் அடுத்தக்கட்டத்தை கையில் எடுக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்ற ஆகஸ்ட் 23-ம் தேதியை இந்தியாவின் தேசிய விண்வெளி தினமாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இந்த சிறப்பு வாய்ந்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் என்று அழைக்கப்படும் இஸ்ரோ (ISRO) நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய விண்வெளித் தொழில்நுட்ப கல்லூரியில்தான் (IIST) தற்போது இயக்குநர் பணியிடம் காலியாக உள்ளது.
இயக்குநர் (Director) பணியிடத்துக்கான கல்வி தகுதி:
இயக்குநர் (Director) பணியிடத்துக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் இன்ஜினியரிங், அறிவியல் (Engineering, Science) பாடப்பிரிவில் டாக்டரேட் (Doctorate )பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
இயக்குநர் (Director) பணியிடத்துக்கான அனுபவத்தகுதி:
இந்தப் பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 2 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
இயக்குநர் (Director) பணியிடத்துக்கான வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 62 வயதுக்குள் உள்ளவராக இருப்பது அவசியம்.
இயக்குநர் (Director) பணியிடத்துக்கான ஊதியம்:
இயக்குநர் (Director) பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் லெவல்-16(Level - 16) என்ற ஊதிய அளவின் படி மாத ஊதியம் பெறுவர்.
தேர்வு முறை:
இந்த பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் savitakotgar@isro.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கடைசி நாளுக்குள் (22.1.2024) அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய https://www.isro.gov.in/media_isro/pdf/recruitmentNotice/2023_December/ApplicationFormforthepostofDirectorIIST_Advt_dated23Dec2023.pdf என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்யவேண்டும்.
விளம்பரம் தொடர்பான அறிவிப்பைக் காண https://www.isro.gov.in/media_isro/pdf/recruitmentNotice/2023_December/AdvertisementforpostofDirectorIIST_dated23Dec2023.pdf என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்யலாம்.


Click it and Unblock the Notifications












