பெர்டிலைசர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் ஆப் திருவாங்கூர் லிமிடெட் (FACT) என்னும் உரம் தயாரிப்பு நிறுவனதில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கிராஜூவேட் என்ஜினியரிங் தொழில்பழகுநர் பிரிவில் 24 இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலிப் பணியிடம் : 24
பயிற்சி : தொழிற்பயிற்சி
பயிற்சி விபரம் மற்றும் காலிப் பணியிடம்
- கணினி பொறியியல் : 2
- கணினி அறிவியல் மற்றும் பொறியியல் : 2
- சிவில் இன்ஜினியரிங் : 3
- இரசாயன பொறியியல் : 5
- இயந்திர பொறியியல் : 5
- மின் மற்றும் மின்னணு பொறியியல் : 4
- எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன் : 1
- இன்ஸ்ட்ரூமென்டேஷன் & கண்ட்ரோல் இன்ஜினியரிங் : 1
- இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங் : 1
கல்வித் தகுதி:
பொறியியல் துறையில் தொடர்புடைய பிரிவில் கணினி அறிவியல், மெக்கானிக்கல், சிவில், இரசாயனம், மின்னணு போன்ற பிரிவுகளில் முதல்வகுப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
பொதுப்பிரிவினர் 1993 அக்டோபர் 2ம் தேதிக்குப் பின்னரும், ஓபிசி பிரிவினர் 1990 அக்டோபர் 2ம் தேதிக்குப் பின்னரும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 1988 அக்டோபர் 2ம் தேதிக்குப் பின்னர் பிறந்தவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.10.2018
தேர்வு செய்யப்படும் முறை:
- எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- பரிந்துரைக்கப்பட்ட மாதிரி விண்ணப்பத்துடன் குறிப்பிட்ட சான்றிதழ்களை நகல் உடன் இணைத்து training@factltd.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இந்த தொழில்பழகுநர் பணி குறித்த மேலும் முழுமையான விவரங்களை அறிய http://www.fact.co.in/Secure/admin/writereaddata/Documents/Advt-English_4oct018.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.


Click it and Unblock the Notifications












