மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகத்தில் (CUTN) காலியாக உள்ள JRF பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.31 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு எம்.எஸ்சி தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகம் (CUTN)
பணி : Junior Research Fellow (JRF)
மொத்த காலிப் பணியிடம் : 01
கல்வித் தகுதி :-
- அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Life Science, Botany, Plant Science பாடங்களில் M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும், NET, GATE தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயம்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.31,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 06.08.2021 தேதிக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள skathiresancutn@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தங்கயது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் கடைசி தேதி : 06.08.2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை : ஆன்லைன் வழியிலான நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு நடைபெறும் தேதி : 10.08.2021 தேதியன்று நடைபெறும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களைக் காணவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://cutn.ac.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினைக் கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












