பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கழகம் (Central Institute Of Plastics Engineering & Technology-Cipet) நிறுவனத்தில் காலியாக உள்ள சிவில் பொறியாளர் மற்றும் சைட் பொறியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.30 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு டிப்ளமோ, பிஇ, பி.டெக் போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் மே 29ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கழகம் (Cipet)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Civil Engineer மற்றும் Site Engineer
கல்வித் தகுதி :
- சிவில் பாடப்பிரிவில் டிப்ளமோ, பி.இ, பி.டெக் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- மேலும், கட்டிடம் கட்டும் துறையில் 10 முதல் 15 வருட பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : ரூ.30,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் cipetranchi@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 06.04.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப்படிவத்தினைப் பெறவும் https://www.cipet.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












