டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இதனை tnpscexams.in என்னும் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தமிழக அரசுத் துறையில் காலியாக உள்ள 6491 கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், வரைவாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு வரும் செப்டம்பர் 1ம் தேதி நடைபெறவுள்ளது.
தற்போது, குரூப் 4 தேர்வுக்கான தேர்வு நுழைவுச் சீட்டினை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் இதனை tnpscexams.net அல்லது tnpscexams.in என்னும் இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நுழைவுச்சீட்டு கிடைக்காதவர்கள், தேர்வுக்கட்டணம் செலுத்திய ரசீதை, ஜெராக்ஸ் எடுத்து contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்து பெற்றுக்கொள்ளலாம். தேர்வுக்கட்டண ரசீதை அனுப்புவதற்கு ஆகஸ்ட் 28ம் தேதி கடைசி நாளாகும். அதற்குப் பிறகு வரும் மின்னஞ்சல் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும்.
தேர்வு நுழைவுச் சீட்டு கிடைக்காதவர்கள் உடனே மின்னஞ்சல் அனுப்பும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். தேர்வு நுழைவுச் சீட்டு இல்லாத விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications












